[X] Close

நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:51 am
  • அ+ அ-

லண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து லண்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். கைதானவுடன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் மார்ச் 29 வரை ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் வந்தது. அப்போது நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வயதான பெற்றோர்கள் மற்றும் செல்லப் பிராணி நாய் குட்டி ஒன்றும் உள்ளது.

இதனால் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோட வாய்ப்பில்லை என்றார். தேவைப்பட்டால் அவர் வீட்டை தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைக்கவும் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறினார். செல்லப் பிராணிகளை விரும்புவோர் பிரிட்டனில் அதிகம். அத்துடன் செல்லப் பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவமும் அங்கு தரப்படும். இதனால் செல்லப் பிராணியாக நீரவ் மோடி வளர்க்கும் நாய் தனித்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

ஆனால் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனாலும் நீரவ் மோடிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வீடியோ அழைப்பு மூலம் நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டால் போதும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close