[X] Close

பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது: பொருளாதார ஆலோசகர் தகவல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:15 am
  • அ+ அ-

ஒட்டுமொத்த நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீத அளவில் இப்போது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்தார்.

சிஐஐ அமைப்பு சார்பில் தொழிற்துறையின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:

இன்றைய சூழலில் உலக பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரத்தன்மையுடன் வளர்ச்சியை நோக்கி இருக்கிறது.

கடந்த காலங்களில் 10 சதவீதமாக இருந்த நாட்டின் பணவீக்கம் இப்போது 4.5 என்றஅளவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான துறைகள் ஒருசேர வளர்ச்சி பெற்று வருவதால் உலகமயமாக்கலுக்கு பின் இந்நிலையை இந்தியா எட்டியுள்ளது. குறைந்த பணவீக்கம், புதிய நிதிக் கொள்கை உட்பட பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவை அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டியின் மூலம் ஒட்டுமொத்த நாடும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரும் ஆக்கப்பூர்வமான கருத்துகள் பரிசீலிக்கப்படுகின்றன. கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் கலாச்சார ரீதியாக நம்மிடம் இருப்பதால் வங்கிகளின் நிலைமை மோசமடையவில்லை. எனினும், வாராக்கடன்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிஐஐ தலைவர் ராகேஷ் பார்தி மிட்டல், துணைத்தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close