[X] Close

‘தேர்டு பார்ட்டி’ கட்டணம் உயர்த்தப்படவில்லை


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:16 am
  • அ+ அ-

மோட்டார் வாகனங்களுக்கு அளிக்கப்படும் தேர்டு பார்ட்டி காப்பீட்டுக் கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படவில்லை. மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தும். 2020-ம் நிதி ஆண்டுக்கான காப்பீடு உயர்வு விவரத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் காப்பீட்டு கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்படும். கடந்த 10 ஆண்டுகளாக இதுதான் நடைமுறையில் இருந்துவந்தது. கடந்த ஆண்டு மட்டும் உயர்வு 10 சதவீதம் முதல் 20 சதவீதமாக இருந்தது.

இப்போது வாகனக் காப்பீட்டில் தேர்டு பார்ட்டி காப்பீட்டுக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதன்படி எஸ்யுவி வாகனத்துக்கு தேர்டு பார்ட்டி காப்பீடு கட்டணம் ரூ. 7,890 ஆக இருக்கும். இதேபோல சிறிய ரக மொபெட், ஸ்கூட்டர் அதாவது 75 சிசி-க்கு உட்பட்ட வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணம் ரூ. 427 ஆக இருக்கும். 75 சிசி முதல் 150 சிசி வரையான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களுக்கான கட்டணம் ரூ. 720 ஆக இருக்கும். உயர் திறன் மிக்க மோட்டார் சைக்கிளுக்கு இது ரூ.985 ஆக இருக்கும்.

சிறிய கார்களுக்கு ரூ. 1,850 ஆகவும், செடான்களுக்கு (1,000 சிசி முதல் 1,500 சிசி வரை) ரூ.2,863 ஆகவும், எஸ்யுவி-க்களுக்கு ரூ. 7,890 ஆகவும் இருக்கும். ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு ரூ. 2,595 ஆகவும், இ-ரிக்ஷாக்களுக்கு ரூ.1,685 ஆகவும் இருக்கும்.

வர்த்தக ரீதியில் இயக்கப்படும் சிறிய ரகக் கார்களுக்கு இது ரூ. 5,437 ஆகவும், செடான்களுக்கு ரூ.7,147 ஆகவும் இருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close