[X] Close

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி


1-13

  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:43 am
  • அ+ அ-

கோவை அருகே 7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.

கோவை, துடியலூர் பன்னிமடையை அடுத்த கஸ்தூரி நாயக்கன்புதூரைச் சேர்ந்த தொழிலாளியின் 7 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியை கடந்த 25-ம் தேதி மாலை முதல் காணவில்லை. பின்னர், மறுநாள் வீட்டருகே உள்ள சந்து பகுதியில் சிறுமி சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது. போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டதால், இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மாநில குழந்தைகள் ஆணைய உறுப்பினர் மோகன் நேற்று முன்தினம் துடியலூர் வந்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 6 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சிறுமியின் சடலம் மீட்கப்பட்டபோது, ஒரு டீ-சர்ட்டால் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. அந்த டீ-சர்ட் யாருடை யது என விசாரணை நடந்து வருகிறது. ஆனால், இதுவரை குற்றவாளி யார் என உறுதி செய்யப்படவில்லை’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close