[X] Close

நீரவ் மோடி ஜாமீன் மனு தாக்கல்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:48 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளசெஞ்சி சட்டப்பேரவை தொகுதிஆரணி மக்களவைத் தொகுதிகுட் பட்டது. இத்தொகுதியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் ஏழுமலை, விழுப்புரம் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் இருவரையும் ஆதரித்து செஞ்சி, திண்டிவனம் கூட்டேரிப்பட்டில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பகுதிகளில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

நாடு நலம் பெற மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். நாட்டின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தேர்தல்இதுவாகும். மத்தியில் அதிக இடங்களில் நாம் இருந்தால்தான் நமக்கானதை பெற முடியும்.

10.5 லட்சம் பேருக்கு வேலைவிவசாய மக்களின் நலன் கருதி நந்தன் கால்வாய் திட்டம்சீரமைக்கப்படும். திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும். திண்டிவனத்தில் ரூ, 1,000 கோடி மதிப்பில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 304 தொழிற்சாலைகள் அமைய உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும்,மறைமுகவாகவும் 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நாம் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம் என்று மேடைக்கு மேடை பேசி வருகிறேன். சொன்னதை செய்திருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்வைத்த தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றினார். தொடர்ந்து, 2016-ம் ஆண்டு வைத்த தேர்தல் அறிக்கைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்தமுறை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த திமுக அரசு, அவர்களின் தேர்தல்அறிக்கையை செயல்படுத்த வில்லை. தனது குடும்பத்தினருக்காக அமைச்சர், எம்.பி. பதவிகளைப் பெற்று பயனடைந்தனர். இதனால்தான் அவர்களது தேர்தல் அறிக்கையை வெற்று அறிக்கை என்கிறோம்.

மத்திய அரசில் 15 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுகவினர், தமிழக மக்களுக்கான தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. நமது ஆட்சியில், கோதாவரி - பாலாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தீர்ப்பளித்தபோதும், திமுக அரசு அதனை அரசிதழில் வெளியிட முயற்சிக்கவில்லை. அவர்கள் செய்யாததை, முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தின் மூலம் செய்து காட்டினார். தமிழக நீராதார உரிமைக்காக, அதிமுக உறுப்பினர்கள், மக்களவையில் குரல் கொடுத்து 23 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்தனர் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close