[X] Close

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; ஆந்த்ரே ரஸ்ஸலை மீண்டும் அடக்குவாரா ரபாடா?


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:04 am
  • அ+ அ-

பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. நிஃப்டி 136 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை அதன் பிறகு இறக்கத்தைச் சந்தித்தது. சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்றதால் இறக்கம் ஏற்பட்டது. இறக்கம் தொடருமா என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை பங்குச் சந்தை ஏற்றம் அடைந்து வர்த்தகமானது.

சென்செக்ஸ் அதிகபட்சமாக 38,593.65 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு வர்த்தக முடிவில் 38,545.72 புள்ளிகளில் நிறைவு செய்தது. நிஃப்டி அதிகபட்சமாக 11,588.50 வரை ஏற்றம் கண்டு வர்த்தக முடிவில் 11,570.00 புள்ளிகளில் நிறைவு செய்தது. பெரும்பாலான துறைகள் ஏற்றத்தைப் பதிவு செய்ததால், பங்குச்சந்தையின் ஏற்றம் நாள் முழுவதும் நிலையாகத் தொடர்ந்தது. மெட்டல் துறை தவிர்த்து, பொதுத் துறை வங்கி, தகவல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, எஃப்எம்சிஜி, ஆட்டோமொபைல், எனர்ஜி, பார்மா உள்ளிட்ட துறைகள் அனைத்திலும் ஏற்றத்தைப் பார்க்க முடிந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close