[X] Close

200 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து: அதானி போர்ட்ஸ் சாதனை


200

  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:24 am
  • அ+ அ-

இந்தியத் துறைமுக நிறுவனங்களில் முதன் முறையாக 200 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்ட நிறுவனமாக அதானி போர்ட்ஸ் நிறுவனம் திகழ்கிறது. 2018-19 நிதி ஆண்டில் அதானி போர்ட்ஸ் கையாண்ட சரக்குப் போக்குவரத்து 200 மில்லியன் டன் அளவைத் தாண்டியுள்ளது. இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் இந்த அளவுக்குச் சரக்குப்போக்குவரத்து பதிவு செய்ததில்லை.

இதுகுறித்து அதானி போர்ட்ஸ் நிறுவன சிஇஓ கரண் அதானி கூறுகையில்,

“இந்த இலக்கை 2020-க்குள் அடைய வேண்டுமென்று நிர்ணயித்திருந்தோம். ஆனால், ஒருவருடம் முன்னதாகவே இலக்கை எட்டிவிட்டோம். இதற்கு காரணம், தொழில்நுட்ப அம்சங்களை தொழிலில் அதிகப்படுத்தியதும், அனைத்து ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தியதும்தான். அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் முந்த்ரா மற்றும் தம்ரா துறைமுகங்கள் சரக்குப் போக்குவரத்தில் முன்னணியில் உள்ளன. மேலும் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன.” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close