[X] Close

ஐடிசி-யின் ஜான் பிளேயர்ஸ் பிராண்டை வாங்குகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:07 am
  • அ+ அ-

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரீடெய்ல் பிரிவு ஐடிசி நிறுவனத்தின் ஜான் பிளேயர்ஸ் பிராண்டை வாங்குவதாக அறிவித்துள்ளது.

ஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸ் இனி ரிலையன்ஸ் வசமாகிறது. வர்த்தக முத்திரை, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட அனைத்தும் இனி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசமாகும்.

நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸை விற்க முடிவு செய்ததாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆயத்த ஆடை பிரிவில் கூடுதலாக இந்த ஆடைகளும் சேரும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது அல்லது எவ்வளவுக்கு விற்கப்பட்டது என்ற விவரத்தை இரு நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை. ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் விற்பனையகங்களின் எண்ணிக்கையை 5 ஆண்டுகளில் 2,500 ஆக உயர்த்தப் போவதாக தெரிவித்திருந்தது. தற்போது நாடு முழுவதும் 557 ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. இத்துடன் ஆன்லைன் வர்த்தகத்தையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்தல் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு ரிலையன்ஸ் பங்கு விலை ரூ. 25.65 அதிகரித்து ரூ. 1,350.90 என்ற விலையில் வர்த்தகமானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close