[X] Close

பங்கு விலக்கலில் எதிரி பங்குகளை விற்று ரூ. 700 கோடி திரட்டிய அரசு: 2-ம் முறையாக இலக்கை எட்டி சாதனை


700-2

  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:35 am
  • அ+ அ-

பங்கு விலக்கல் நடவடிக்கையில் முதல் முறையாக எதிரி பங்குகளை விற்று ரூ.700 கோடி திரட்டியுள்ளது அரசு. மேலும், பங்குவிலக்கல் இலக்கை இரண்டாம் முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரி என்று கருதப்படும், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்த, இனி இந்தியக் குடிமகன் இல்லை என்று கருதப்படுபவர்களின் நிறுவனங்களில், சொத்துகளில் அரசு வைத்துள்ளபங்குகளை ‘எதிரி பங்குகள்’எனபாவித்து அவற்றை விற்பனை செய்துள்ளது. இந்த எதிரிப் பங்குகள் விற்பனை மூலம் முதன் முறையாக ரூ.700 கோடி திரட்டப்பட்டது.

மேலும், பங்குகளைத் திரும்பப்பெறல் நடவடிக்கையின் மூலம்,அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிடம் அரசு வைத்துள்ள பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் ரூ.10,600 கோடி நிதித்திரட்டியது. 2018-19 நிதி ஆண்டில், இடிஎஃப் ஃபண்டுகளின் விற்பனை மூலம் ரூ. 45,729 கோடிதிரட்டப்பட்டது. ஆர்இசி நிறுவனத்தில் அரசு வைத்திருந்த 52.63 சதவீத பங்குகளை பவர் பைனான்ஸ்கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு விற்று ரூ. 14,500 கோடி திரட்டப்பட்டது. ஐபிஓ வெளியீடுகள் மூலம் ரூ. 1,929 கோடி திரட்டப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்த நிதி ஆண்டின் பங்கு விலக்கல் இலக்கை அரசு எட்டியது. 2018-19 நிதி ஆண்டு பட்ஜெட்டில் பங்கு விலக்கில் இலக்குரூ.80,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ. 85,000 கோடியாக உள்ளது. இதற்கு முன் 2017-18 நிதி ஆண்டில் ரு.72,500 என்ற இலக்கைத் தாண்டி ரூ. 1 லட்சம் கோடி திரட்டியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close