[X] Close

சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய கூடுதல் அதிகாரம் தேவை: சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:29 am
  • அ+ அ-

நிதி மோசடிகளைத் தடுக்க நிறுவனங்களின் நிதி நிலையை ஆராய்வதில் கூடுதல் அதிகாரம் தேவை என சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி கோரிக்கை விடுத்துள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம், சமீபகாலமாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் நலன்மற்றும் சந்தை மீதான அவர்களின் நம்பகத்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறியுள்ள செபி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய்வது அவசியமானது எனத் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் நிதிநிலை, தொழில் செயல்பாட்டு பதிவுகளை ஆராய்வதற்கு கூடுதல் அதிகாரம் ஆணையத்துக்குத் தேவை என்று அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வலுவான சட்டங்கள் தேவைமேலும், நிதிநிலை தொடர்பான விவரங்களையும், வரலாறுகளையும் மாற்றுவது, அழிப்பது அல்லது தவறான விவரங்களை வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கவும் வேண்டும். அதற்கேற்ப சட்டங்களும் வலுவாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளது. எனவே அரசு இதை கருத்தில்கொண்டு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரத்தை விரிவுபடுத்துவதோடு, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close