[X] Close

நாவலைப் பின்தொடரும் ஒளிப்படப் பயணம்!


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 09:25 am
  • அ+ அ-

ஐடி நிறுவனமான மைண்ட்ட்ரீயைக் கையகப்படுத்த எல் அண்ட் டி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மைண்ட்ட்ரீ நிறுவனர்களுக்கு நிறுவனத்தை விட்டுத்தர பெரும் பணம் கொடுக்க எல் அண்ட் டி முயற்சித்ததாக அதன் முன்னாள் சிஇஓ சுப்ரதோ பாக்சி அம்பலப் படுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னணி பல்துறை நிறுவனமாக உள்ள எல் அண்ட் டி நிறுவனம் மைண்ட்ட்ரீ நிறுவ னத்தைக் கையகப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த திங்கள் அன்று மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும், காபி டே நிறுவனத் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா தனது 20.4 சதவீத பங்குகளை எல் அண்ட் டி நிறுவனத்திடம் ரூ.3,300 கோடிக்கு விற்றுவிட்டார்.

இதையடுத்து எல் அண்ட் டி பங்குச் சந்தையிலும், ஓப்பன் ஆஃபரிலும் பங்குகளை வாங்க முயற்சித்தது. இதனால் மைண்ட்ட்ரீ நிறுவனத்திலும், அதன்நிர்வாகத்திலும் குழப்பம் ஏற் பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான சுப்ரதோ பாக்சி, மைண்ட்ட்ரீ ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “மைண்ட்ட்ரீ நிறுவனத்தை விட்டுக்கொடுப்பதற்காக, புரொமோட்டர்கள் கிருஷ்ணகுமார் நடராஜன், ரோஸ்டோவ் ராவணன், பார்த்தசாரதி ஆகியோர் உட்பட எனக்கும் பெருமளவிலான பணம் கொடுப்பதாக எல் அண்ட் டி கூறியது. ஆனால், அவர்களுடைய இந்த ஆஃபரை நாங்கள் மரியாதையுடன் மறுத்தோம்.

பொறுமையாக மறுத்ததாலோ என்னவோ, கீழ் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு கூட்டத்தின் முட்டாள்தனமான முடிவுஇது என எல் அண்ட் டி நினைக்கிறது. மைண்ட்ட்ரீ நிறுவனத் தைக் காப்பதற்காக நான், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வகித்து வந்த என்னுடைய தற்போதைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மைண்ட்ட்ரீயில் மீண்டும் இணைந்துள்ளேன்.

20 வருடங்களாக வளர்த்த இந்த மரத்தை பிடுங்க பில்டர்கள் புல்டோசர்களுடனும், கிரேன் களுடனும் வந்துவிட்டார்கள். இந்தச் சமயத்தில் என்னால் நிறு வனத்திலிருந்து வெகுதொலைவில் இருக்க முடியாது. எனவே இந்த மரத்தைக் காக்க வந்துவிட்டேன்” என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

மைண்ட்ட்ரீ ஊழியர்கள் அனைவரும், தங்களுடைய வாடிக்கை யாளர்களை மட்டுமே மனதில் நிறுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மைண்ட்ட்ரீயைக் காக்க முதல் வரிசையில் கேகே, ரோஸ்டோவ், பார்த்தா மற்றும் நான் அனைவரும் முதல் வரிசையில் நிற்போம் என அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close