[X] Close

விஜய் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:41 am
  • அ+ அ-

அந்நியச் செலாவணி விதிமீறல் நடவடிக்கைகளுக்காக இங்கிலாந்துக்கு தப்பியோடிய தொழில்அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பெங்களூருவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் என்.கே.மட்டா மற்றும் சம்வேத்னா வர்மாஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி தீபக் ஷெராவத் பெங்களூரு போலீசாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள்ளாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று பெங்களூரு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக மல்லையாவுக்கு சொந்தமான 159 சொத்துகளை அடையாளம் கண்டுள்ளதாக நீதிமன்றத்தில் பெங்களூரு போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் இவற்றில் ஒன்றை கூட பறிமுதல் செய்யவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி விஜய் மல்லையா தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு மே 8-ம் தேதி மல்லையாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்ததோடு இது தொடர்பான அறிக்கையையும் கேட்டிருந்தது.

அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்விஜய் மல்லையா ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வெளி வரமுடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கமான பிடி ஆணை உத்தரவுகளைக் காட்டிலும் ஓபன் என்டட் என்றமுறையில் வழங்கப்படும் ஜாமீனில்வெளி வரமுடியாத பிடி ஆணை உத்தரவுகளை செயல்படுத்த காலக்கெடு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close