[X] Close

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 4 இடங்கள் முன்னேற்றம்


4

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:43 am
  • அ+ அ-

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ஏசிஐ) விமான நிலையங்களில் வந்துசெல்லும் மக்கள் கூட்டத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 12-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

2017-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் 16-ம் இடத்தில் இருந்தது. 2018-ல் ஃப்ராங்பர்ட், டல்லாஸ் ஃபோர்த் வொர்த், குவாங்சோ மற்றும் இஸ்தான்புல் அலாதுர்க் ஆகிய நான்கு விமான நிலையங்களையும் தாண்டி முன்னேறி 12-ம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு, 2018-ம் ஆண்டில் 6.9 கோடி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

பட்டியலில் இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு முன் இடம்பெற்றுள்ள நான்கு விமான நிலையங்கள் இதைவிட 46 லட்சம் பயணிகள் வரை மட்டுமே கூடுதலாகச் சந்தித்துள்ளது. டெல்லி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதமாகாமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டே முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருக்கும் என ஏசிஐ கூறியுள்ளது.

2023-க்குள் இந்த விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும் ஏசிஐ கணித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close