[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

புதிதாக தொடங்கப்பட்ட 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு இல்லை என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிப்பதாக அறிவித்தது. நிறுவனம் தொடங்கியதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு இந்தச் சலுகைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 120 புதிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பு கிடையாது என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிட மிருந்து திரட்டும் நிதிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. வரு மான வரித் துறை வெளியிட்ட அறி விப்பின் மூலம் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. புதிய நிறுவனங்களாயிருப்பின் அவை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) பிறப்பித்த இந்த உத்தரவை காண்பிக்க முடியும். மதிப்பீடுகள் முடிவடைந்து இறுதியாக செலுத்த வேண்டிய வரி விதிப்பு குறித்த உத்தரவு வழங்கப்படும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த வரி விலக்கு உத்தரவை காட்ட முடியும். அல்லது உயர் அதிகாரிகளிடம் காட்டி வரி விலக்கு பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 150 நிறுவனங்கள் வரிவிலக்கு கோரி மார்ச் மாத தொடக்கத்தில் விண்ணப்பித்திருந் தன. இவற்றில் 120 நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கான வரி விலக்கு சான்று அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் விண்ணப்பத்தில் தவறுகள் இருக்கலாம் அல்லதுஅவை ஸ்டார்ட் அப் நிறுவன வரையறைக்குள் வராமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது முன்னர் 7 ஆண்டுகளாக இருந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிதாக உருவாவதோடு, வசதி படைத்தவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உரு வாக்கவும் அரசு இந்தச் சலு கையை அளித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close