[X] Close

கிருஷ்ணர் பற்றி அவதூறு; கி.வீரமணி மீது நடவடிக்கை: ராம கோபாலன் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 06:57 am
  • அ+ அ-

உலக அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) குறிப்பிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளால் இது சாத்தியமானதாக ஐஎம்எப் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் கெர்ரி ரைஸ் தெரிவித்தார்.

இத்தகைய வளர்ச்சிக்கு இதுபோன்று மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 7 சதவீத அளவுக்கு உள்ளது. இது விரைவான வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக உயர்வதற்கு வழியேற்படுத்தியுள்ளது என்றார்.

மிக முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்போதுதான் விரைவான வளர்ச்சி சாத்தியமாகும் என்று தாங்கள் கருதுவதாக அவர் கூறினார்.

இந்தியப் பொருளாதாரம் குறித்த விரிவான அறிக்கை எதிர்வரும் உலக பொருளாதார பேரவையின் (டபிள்யூஇஓ) ஆண்டு கூட்டத்துக்கு முன்பாக வெளியிடப்படும் என்றார். இந்த அறிக்கையானது அமெரிக்கா வாழ் இந்தியப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்தால் தயாரிக்கப்படுகிறது. அவர்தான் தற்போது ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணராக உள்ளார்.

உலக பொருளாதார பேரவை கூட்டத்தில் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அத்துடன் வங்கிகளின் வாராக் கடன் சுமை இல்லாத நிலை, நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை, பற்றாக்குறையை மத்திய மாநில அரசுகள் கட்டுக்குள் வைத்தது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இத்துடன் தொழிலாளர் சீர்திருத்தம், நில சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் விரைவான வளர்ச்சி சாத்தியமாகும் என்று ரைஸ் குறிப்பிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close