[X] Close

இந்தியாவின் ஜிடிபி குறையும்: ஃபிட்ச் கணிப்பு


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 09:42 am
  • அ+ அ-

தரச்சான்று நிறுவனமான ஃபிட்ச் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறையும் என்று கணித்துள்ளது.

7 சதவீதம் என முன்னர் கணித்திருந்த இது தற்போது 6.8 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது. அதேபோல சர்வதேச அளவிலான ஜிடிபியும் 7.2 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. ஆனால் அதைவிடவும் குறைவாக ஃபிட்ச் மதிப்பீடு செய்துள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதமாக இருந்தது.

2019-20-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இது 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் 2021-ல் இது 7.1 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்துவரும் நிதிக் கொள்கை காரணமாக வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் சீரான வளர்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close