[X] Close

ரூ. 8,100 கோடி வங்கி மோசடி வழக்கு; முக்கிய குற்றவாளி ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது


8-100

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 09:43 am
  • அ+ அ-

வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹிதேஷ் படேல் என்பவர் அல்பேனியாவில் டிரானா எனுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் குழுமம் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டது.

போலியான நிறுவனங்கள் (ஷெல் கம்பெனி) தொடங்கி அவற்றுக்கு கடன் பெற்று அந்தத் தொகையை திருப்பிவிட்டுள்ளனர். இதில் நிதின் சந்தேஸரா மற்றும் சேதன் சந்தேஸரா ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாவர். இவர்களின் மைத்துனர்தான் ஹிதேஷ் படேல். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். ஆனாலும் வங்கிப் பணத்தை பரிவர்த்தனை செய்து போலி நிறுவனங்களுக்கு மாற்றியதில் இவருக்கும் முக்கிய பங்குண்டு. இதையடுத்து இவர்கள் மூவர் மீதும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. வங்கியில் கடன் பெற்று அதை மோசடியாக போலி நிறுவனங்களுக்கு மாற்றியது தொடர்பாக வங்கியின் இயக்குநர்கள் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனர்களான நிதின் சந்தேஸரா மற்றும் சேதன் சந்தேஸரா சகோதரர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டனர்.

அந்நியச் செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத்துறையும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் மற்றும் ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் கார்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close