[X] Close

ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க மோடியே காரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 06:49 am
  • அ+ அ-

முறை சார்ந்த தொழில்களில் கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஓ தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 8.96 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத அளவை விட மிக அதிமாகும். இபிஎப்ஓ செப்டம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையில் புதிய வேலை உருவாக்க பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் உருவான வேலை வாய்ப்புகளை விட இந்த ஆண்டு ஜனவரியில் 131 சதவீத அளவுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று இபிஎப்ஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3.87 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2017-ம் ஆண்டு செப்டம்பரில் 2,75,609 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தொழிலாளர் சேம நல நிதி திட்டங்களில் புதிதாக சேர்ந்த சந்தாதாரர் எண்ணிக்கை 76.48 லட்சமாகும். இவை அனைத்தும் முறை சார்ந்த பணிகளில் கடந்த 17 மாதங்களில் உருவான வேலை வாய்ப்புகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஜனவரி மாதம் 8,96,516 புதிய சந்தாதாரர்கள் பதிவாகியுள்ளனர். 2018 டிசம்பரில் 7.03 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close