[X] Close

அனில் அம்பானியிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க  என்சிஎல்டியிடம் முறையிட பிஎஸ்என்எல் முடிவு


anil-ambani

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 07:31 am
  • அ+ அ-

அரசு தொலைதொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ னிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்துள்ளது.

கடன் சுமை, நிதி நெருக்கடி போன்றவற்றுக்கு ஆளாகியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குத் தர வேண்டிய ரூ. 700 கோடி தொகை நிலுவை யில் உள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவன மான எரிக்சன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றிபெற்ற நிலையில், அதற்கு ரூ.550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனில் அம் பானிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற ஆணையின்படி, இந்தத் தொகையை எரிக்சனுக்கு வழங்க, எஸ்பிஐ உட்பட தனது 37 கடன்தாரர்களின் அனுமதியைக் கோரியது ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ். ஆனால், கடன்தாரர் கள் இதற்கு சம்மதிக்க மறுத்து விட்டனர்.

எரிக்சனுக்கு தர வேண்டிய தொகையைக் கொடுக்க மார்ச் 19 கடைசி தேதி என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை ரூ. 119 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 260 கோடியை எஸ்பிஐ வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற மனுவுக்கும் எஸ்பிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகை எரிக்சன் என்ற தனியார் நிறுவனத்துக்குச் செல்வதை, எஸ்பிஐ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விரும்பவில்லை.

சிறைத் தண்டணை

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தரவேண்டிய ரூ.700 கோடியை மீட்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுகப் போவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. எரிக்சனுக்குத் தரவேண்டிய தொகையைத் தராதபட்சத்தில் அனில் அம்பானி சிறைக்குச் செல்ல நேரிடும் நெருக்கடியும் உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close