[X] Close

மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்


ford-figo

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 10:51 am
  • அ+ அ-

ஃபோர்டு நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளூ என மூன்று வேரியன்ட்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை ரூ. 5.15 லட்சம் முதல் ரூ. 8.09 லட்சம் வரையாகும். ஏற்கெனவே உள்ள ஃபிகோ மாடலைக் காட்டிலும் 1,200 பாகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.73,700 விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக சக்தி அளிப்பதற்காக புதிய மேம்படுத்தப்பட்ட இன்ஜின் இதில் உள்ளது.

பிரீமியம் மாடலான டைட்டானியம் புளூ மாடலில் 15 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மழை உணர் சென்சார், தானாக ஒளிரும் முகப்பு விளக்கு, எலெக்ட்ரோ குரோமிக் ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. பெட்ரோல் மாடல் 1.2 லிட்டர் இன்ஜினுடனும், டீசல் மாடல் 1.5 லிட்டர் இன்ஜினுடனும் வந்துள்ளது. இதில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி எனப்படும் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

இந்த மாடல் சுஸுகி ஸ்விப்ட், கிராண்ட் ஐ 10, டாடா டியாகோ உள்ளிட்ட மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close