[X] Close

சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.16.4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்


16-4

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 16:27 pm
  • அ+ அ-

நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் டபிள்யூபிஐ எனப்படும் இந்தஉணவுப் பொருள் மொத்த சில்லரை பணவீக்கம் 2.74 சதவீதமாக இருந்தது.

முதன்மை பொருட்கள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றில் காணப்பட்ட உயர்வு காரணமாக பணவீக்கமும் அதிகரித்ததாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

விலை அதிகரிப்பு

2019-ம் ஆண்டு ஜனவரியில் டபிள்யூபிஐ 2.76 சதவீதமாக இருந்தது. உருளை, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் பொருள்களின் விலை 4.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவை ஜனவரியில் 3.54 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் குறிப்பாக எரிபொருள், மின்சாரத்தைப் பொறுத்தவரை 2.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரியில் 1.85 சதவீதமாக இருந்தது.

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை பிப்ரவரி மாதம் 0.25 சதவீதம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close