[X] Close

நேர்காணல்: என்னைப் பெண்ணாக உணர்ந்தேன்! - நடிகர் விஜய் சேதுபதி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 19:52 pm
  • அ+ அ-

தனது கணவரின் தொழில் பரிவர்த்தனைகள் குறித்த விவரம் எதுவும் தனக்குத் தெரியாது என்று ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் பதில் அளித்துள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி வகித்த சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார். கணவரின் தொழில் கூட்டாளி வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்.

சந்தா கோச்சார் வங்கியின் சிஇஓ வாக பதவி வகித்த காலத்தில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 300 கோடி கடன் வழங்கப்பட்டது. அதற்கு கைமாறாக தீபக் கோச்சாரின் நுபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி வீடியோகான் வழங்கியது. இந்தத் தொகையானது வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டதற்காக கோச்சாருக்கு அளிக்கப்பட்ட லஞ்சத் தொகை என சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்த போது, வங்கி சார்ந்த விஷயங்கள் எதையும் தனது கணவரிடம் ஒருபோதும் விவாதித்தது கிடையாது என்று சந்தா கோச்சார் கூறியுள்ளார். அதேபோல வங்கி மூலம் கடன் அளித்ததற்கு எந்த பிரதிபலனையும் ஒரு போதும் பெற்றது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

தீபக் கோச்சார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொகையானது தூத் மூலமாக மொரீஷியஸ் வழியாக முதலீடு செய்வதைப் போன்று வந்துள்ளது. இதுகுறித்து மொரீஷியஸுக்கு விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீடியோகான் நிறுவனத்துக்கு தகுதியின் அடிப்படையில்தான் கடன் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் வீடியோகான் நிறு வனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை பரிசீலிக்கும் குழு உரிய வகையில் பரிசீலித்த பிறகே கடன் வழங்க ஒப்புதல் அளித்தது என்று தெரிவித்தார்.

நான்கு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தா கோச்சாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கடன் வழங்கப்பட்டது தொடர்பான இணையதள தகவல் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறை தேடி வருகிறது. அதன்மூலம்தான் கடன் வழங்கியதில் சந்தா கோச்சாருக்கிருந்த உள் நோக்கத்தை நிரூபிக்கமுடியும் என இரு அமைப்புகளும் கருதுகின்றன. இப்போது உள்ள ஆதாரங்கள் மூலம் தீபக் கோச்சாருக்கும், வேணுகோபால் தூத் ஆகியோருக்கிடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. தீபக் கோச்சாரிடம் விசாரித்தபோது, தான் ஒருபோதும் தூத் நிறுவனத்துக்கு கடன் வழங்கும்படி தனது மனைவியிடம் கூறியது கிடையாது என்று தெரிவித்துள்ளார். வங்கி கடன் வழங்கியதும், அதே சமயத்தில் தனது நிறுவனத்தில் வீடியோகான் முதலீடு செய்ததும் எதேச்சையான நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close