[X] Close

லாலு பிரசாத் யாதவின் மகன்கள் மோதல்: கட்சி பொறுப்பிலிருந்து விலகினார் தேஜ் பிரதாப்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 07:56 am
  • அ+ அ-

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த விபத்தில் சிக்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் ஏவிஷேயன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் 12 உள்ளன. ஜெட் ஏர்வேஸிடம் 5 விமானங்கள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பயணிகளின் பாதுகாப்பு, பத்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் மற்றும் பல நாடுகளில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவன பங்கு விலை 8 சதவீத அளவுக்குச் சரிந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமாக 17 போயிங் ரக விமானங்கள் உள்ளன. இவற்றில் 12 விமானங்கள் போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்தவையாகும். பெருமளவிலான விமானங்கள் தரையிறக்கப்பட்டதால், 14 விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று ரத்து செய்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close