[X] Close

வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:23 am
  • அ+ அ-

பியூச்சர் குழுமம் கிழக்கு இந்திய பகுதிகளில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிதாக பிக்பஜார் அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இதற்கான பணிகள் தொடங்கப் படும் என்றும், மொத்தம் 25 அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கிழக்குப் பகுதி தலைமை செயல் அதிகாரி மணிஷ் அகர்வால் கூறியதாவது, “கிழக்கு இந்திய பகுதிகள் இந்தியாவின் மொத்த விற்பனையில் 25 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

இந்தப் பகுதிகளில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. மொத்த வருவாயில் மேற்கு வங்கம் மட்டும் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. எனவே, எங்கள் நிறுவனம் கிழக்கு இந்திய பகுதிகளில் 25 பிக் பஜார் அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. ஒருஅங்காடியின் உட்புற கட்டமைப்பு களுக்கு மட்டுமே சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் முதலீடு தேவைப்படுகிறது” என்றார். கொல்கத்தாவில் 7-8 அங்காடி களும், அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 25 அங்காடிகளும் திறக்கப்பட உள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close