[X] Close

கமல் போட்டியிடாதது ஏன்?


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:17 am
  • அ+ அ-

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 13.9 சதவீத அளவுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட தொழில்துறை சார்ந்த ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில் துறையில் அதிக வேலை இழப்பு நிகழ்ந்ததாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாயின. 2018-ம் ஆண்டில் மட்டும் 1.30 கோடி பேர் வேலையிழந்ததாகவும், கடந்த 46 ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்தத் தொழில் துறை மூலம் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் எம்எஸ்எம்இதுறையில் உருவாக்கப்பட்ட தாகவும் இதன் மூலம் இத்துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 3,32,394 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது ஆண்டுக்கு 3.3% வளர்ச்சி என்ற அளவிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது மொத்தம் 1,05,347 தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள 350 தொழில் மையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு வேலை வாய்ப்பை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இத்துறை அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வேலை வாய்ப்பு 45 கோடி என்றும் இதில் ஆண்டுதோறும் 1.3 கோடி வேலை வாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படுவதாகவும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் சுற்றுலாத் துறை அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜவுளி, ஆயத்த ஆடை,உலோகம் போன்ற துறைகள் அபரிமிதமான வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இயந்திர உதிரி பாகம் மற்றும் போக்குவரத்து, சரக்குகளை கையாள்வது போன்றதுறைகளும் அதிக எண்ணிக் கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளாக கண்ட றியப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, குஜராத், தெலங் கானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், ஏற்றுமதி யில் மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகியவை முன்னணி யில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்துறைக்கு 2% வட்டி சலுகை,பொருள் கொள்முதலில் இத்துறைக்கு சலுகை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இத் துறைஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close