[X] Close

விப்ரோ பங்குகள் 5% சரிவு


wipro-shares

  • kamadenu
  • Posted: 09 Mar, 2019 11:18 am
  • அ+ அ-

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ பங்குகள் நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிவைக் கண்டது. இதற்கு முக்கிய காரணம் விப்ரோ நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 2.66 கோடி பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 74.30 சதவீத பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது.

சுமார் 336 கோடி பங்குகள். இவற்றில் நேற்று திடீரென்று 2.66 கோடி பங்குகளை விற்பனை செய்தது. இதனால், விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை இறக்கம் அடைய ஆரம்பித்தது. அதிகபட்சமாக 4.91 சதவீதம் இறக்கம் அடைந்து ரூ.255.60 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில் 4.58 சதவீத இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. விற்கப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு கிட்டதட்ட ரூ.700 கோடிக்கும் மேல்.

பெருமளவிலான பங்குகளை விற்பனை செய்ததாலேயே பங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், முன்னதாகவே செபியிடம் பங்குகளை விற்பதற்கான அனுமதியை அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக இவ்வளவு பங்குகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்த விவரங்களை நிறுவனத் தரப்பு வெளியிடவில்லை. அதேசமயம் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை விற்பனை செய்ததற்கும் விப்ரோ நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close