[X] Close

3.4% நிதி பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை


subash-chandra-kanth

  • kamadenu
  • Posted: 09 Mar, 2019 09:48 am
  • அ+ அ-

2018-19 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு எட்டுமென பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசு வருவாய் இந்த நிதி ஆண்டில் குறைவாக உள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டியே இருக்கும் என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.4 சதவீதத்துக்குள் இருக்கும்படி எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் ரூ. 12 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரியான ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.43 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 6.43 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. செலவு குறைப்புஅரசின் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை 3.4 சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. எனவே, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த செலவினங்களை அரசு குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் வைக்க முடியும் என நம்பிக்கை உள்ளது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close