[X] Close

குடும்ப அரசியல் செய்கிறதா திமுக? வாரிசு என்பதால் வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? - தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி


  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 16:32 pm
  • அ+ அ-

வேளாண் பொருள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் விவ சாயிகளுக்கு அவர்களுக்கு அளிக் கும் மானிய உதவியை நேரடி யாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

சர்வதேச அளவில் இந்திய வேளாண் பொருட்கள் போட்டியிட வும், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதியாகும் வேளாண் பொருட்களுக்கு அளிக் கப்படும் மானிய உதவியை அவர் களது வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச் சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டமானது மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதை மார்ச் 31, 2020 வரை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்பது எனவும், பிறகு இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இதை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானிய உதவி அளிப்பதில் வெளிப்படையான நடைமுறை இருக்கவும், இதில் குளறுபடிகள் நடப்பதைத் தடுக்கவும் இத்தகைய முறையைக் கையாள அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் வேளாண் ஏற்றுமதிக்கான போக்குவரத்து மற்றும் சந்தைப் படுத்தலில் உதவவும், வங்கி களுக்கு நேரடியாக பண பரிவர்த் தனை செய்யவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

இந்தத் திட்டத்தின் கீழ் சரக்கு களை அனுப்புவதற்கான கட்டணம், சந்தைப்படுத்துவதற்கான உதவி அதாவது கடல் மார்க்கமாக அல்லது விமானம் மூலமாக சரக்குகளை அனுப்புவதற்கான உதவிகளும் இத்திட்டத்தில் அடங்கும். வேளாண் ஏற்றுமதி பொருட்களுக் கான தொகை கிடைத்தவுடன் அதா வது அந்நியச் செலாவணியாக ஏற்றுமதியாளர் கணக்கிற்கு வந்த வுடன் மானிய உதவிகள் அவரது கணக்கிற்கு அனுப்பப்படும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

இந்தத் திட்டத்துக்கு போக்கு வரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி திட்டம் என்று பெயர். இது வேளாண் மற்றும் பண்ணை பொருள், சில குறிப்பிட்ட பொருள் ஏற்றுமதிக்கு மட்டுமான திட்ட மாகும்.

இதில் கடல் உணவுப் பொருள் கள், மலையக பொருள்கள் அதா வது பிரிவு 1 முதல் 24 வரையிலான பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கும் இது கிடைக்கும். ஆனால் இத்திட்டத்தில் உயிருள்ள விலங்குகள், இறைச்சி, இறால், பால், நெய், சீஸ், தயிர், வெங் காயம், பூண்டு, கோதுமை, அரிசி, உலர் திராட்சை, காய்கறிகள் உள்ளிட்டவற்றுக்கு மானிய உதவி கிடைக்காது.

சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அதாவது ஐரோப்பிய யூனியன், மேற்கு ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு மானிய உதவி வழங்கப்படும்.

ஆனால் இந்த நாடுகளுக்கு ஏற்று மதி ஆகும் எந்தெந்த பொருட் களுக்கு மானிய உதவி அளிக்கப் படும் என்ற விவரத்தை உடனடியாக அதிகாரிகள் வெளியிடவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில் (2022) வேளாண் ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வேளாண் ஏற்றுமதி 3,000 கோடி டாலராக உள்ளது.

வேளாண் ஏற்றுமதியை ஊக்கு விக்க அதற்காகும் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் கட்ட ணத்தை அரசு மானிய உதவியாக அளிக்க உள்ளதாக வர்த்தக அமைச் சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மானிய நிதி உதவியானது அனுப்பப்படும் பொருள், அதை அனுப்பும் மார்க்கம் (கடல், வான் வழி), மற்றும் சரக்கின் அளவு ஆகியவற்றைப் பொருத்து இருக் கும். 20 அடி உயரமுள்ள கன்டெய் னருக்கு ரூ. 8,400 நிதி உதவி அளிக்கப் படும். வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் தொகையானது ரூ. 28,700 வரை இருக்கும். அதேபோல விமானம் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 840 தொகையும். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 2,800 உதவியும் அளிக்கப்படும்.

அமெரிக்கா, கனடா, இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, பஹ் ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய் லாந்து, வியட்நாம், ஜப்பான், வட கொரியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஹாங்காங், தாய்வான், ஆர் ஜென்டீனா, பிரேசில், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் இந்தச் சலுகையைப் பெறலாம்.

ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப் பட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன் சிலை தொடர்பு கொண்டு இந்த சலுகைகளைப் பெறலாம்.

அரசின் இந்தத் திட்டத்தால் வேளாண் ஏற்றுமதி செய்யும் நிறு வனங்கள் மட்டுமே பலனடையும். அரசு அளிக்கும் பலன் விவசாயி களுக்குக் கிடைக்காது என்று அகில இந்திய பண்ணை பொருள் உற் பத்தி விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ். சின்னா குறிப்பிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close