[X] Close

இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சியை எட்டும்: தரச்சான்று நிறுவனம் மூடி’ஸ் கணிப்பு


indian-economy

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 09:55 am
  • அ+ அ-

நடப்பாண்டு மற்றும் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 7.3 சதவீத அள வுக்கு இருக்கும் என்று தரச் சான்று நிறுவனமான மூடி’ஸ் கணித்துள்ளது.

2019 மற்றும் 2020-ம் ஆண்டில் சர்வதேச அளவில் வளர்ச்சி விகிதம் எந்த அளவில் இருக்கும் என்பது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கை யில் இத்தகவல் இடம்பெற்றுள் ளது.

உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் நிலவும் தேக்க நிலை யின் பாதிப்பு இந்தியாவுக்கு குறை வாகவே உள்ளது. ஏனெனில் உற் பத்தி துறை வர்த்தகமானது ஆசியா மற்றும் பிற வளரும் நாடுகளிடையே மிகவும் குறைவாக உள்ளது. மேலும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க பட்ஜெட்டில் அறி விக்கப்பட்ட சலுகைகள் இத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்று மூடி’ஸ் கணித்துள்ளது.

இந்திய வீடுகளில் செலவழிக் கும் விகிதம் ஸ்திரமாக உள்ளது. மேலும் முதலீடுகளின் வருகை மற் றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியன சாதகமான அம்சங்களாக உள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயி களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட் டுள்ளன. அத்துடன் நடுத்தர மக் களுக்கு பயன் தரும் வகையில் வருமான வரி சலுகையும் அளிக்கப் பட்டுள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக மானிய சலுகை மற்றும் மக்களுக்கு வரி சலுகை ஆகியவற்றின் காரண மாக 0.45 சதவீத வளர்ச்சி ஜிடிபி-யில் இருக்கும் என்றும் இந்த நுகர்வுப் போக்கு அடுத்த ஆண்டும் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் கணிசமாகக் குறைத்தது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கைகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டதால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

அக்டோபர் டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைந்ததையடுத்து நடப் பாண்டில் வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீத மாகக் குறைத்துள்ளது மத்திய புள்ளியியல் அலுவலகம். டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 6.6 சதவீத மாக உள்ளதாக சிஎஸ்ஓ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close