[X] Close

வருமான வரி ரிட்டர்ன் பெற பான் எண், வங்கிக் கணக்கு இணைப்பு அவசியம்: வரித் துறை அறிவுறுத்தல்


income-tax-returns

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 07:24 am
  • அ+ அ-

வருமான வரி செலுத்துபவர்கள் கூடுதலாக செலுத்தியதற்கான விவரத்தை ரிட்டர்ன் தாக்கல் செய்து திரும்பப் பெறுவது வழக்கம். பொதுவாக இவ்விதம் வரித் துறை அளிக்கும் ரீஃபண்ட் தொகை காசோலையாக வழங்கப்படும். இனிமேல் மின்னணு பரிவர்த்தனை மூலம் இத்தொகையை அனுப்ப வரித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் பான் எண்ணுடன் வங் கிக் கணக்கு விவரத்தை இணைக்க வேண்டும் என்று வரித் துறை தெரி வித்துள்ளது. இனிமேல் மின்னணு மூலமாக மட்டுமே (இ-ரீஃபண்ட்) அளிக்கப்படும். இது மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்குடன் பான் (நிரந்தர கணக்கு எண்) இணைப்பதால் அவரவர்க்கு திரும்ப அளிக்க வேண்டிய தொகை நேரடியாக வங்கிக் கணக்குக்கே அனுப்பப்படும் என தெரிவித்துள் ளது. வங்கியில் நடப்புக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்காக இருந்தாலும் அந்த விவரத்தை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதுவரை வரித் துறையினர் வங் கிக் கணக்குக்கு அல்லது கசோலை மட்டும் அளித்தனர். இது வரி ரிட்டர்ன் தொகையைப் பொறுத்து மாறுபடும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பான் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவ ரத்தை இ-ஃபைலிங் இணையதளத் துக்கு சென்று தெரிந்து கொள் ளலாம். இணையதள முகவரி: https://www.incometaxindiaefiling.gov.in https://www.incometax indiaefiling.gov.in

பான் எண்ணுடன் இணைக்காத வர்கள், தங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை அளித்திருந்தால் அந்த கணக்கு இணைக்கப்பட்டிருக் கிறதா என்பதையும் இணையதளத் தில் தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் என தெரிவிக் கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மார்ச் 31-க்குகள் முழுமையடையும் என்று தெரிகிறது. இதுவரையில் வருமான வரித் துறையினர் 42 கோடி பான் அட்டைகள் வழங்கியுள் ளனர். இதில் 23 கோடி மட்டுமே ஆதா ருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை யுஐடிஏஐ வழங்கியது. வருமான வரித் துறை வரி செலுத்துவோருக்கு 10 இலக்க எண்ணுடன் கூடிய நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கியது.

-பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close