[X] Close

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ரூ. 20 ஆயிரம் கோடி: மறைமுக வரிகள் ஆணையம் தகவல்


gst-tax-evasion

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 11:56 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணைய அதிகாரியான ஜான் ஜோசப் என்பவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும், வரி ஏய்ப்பை மேலும் கட்டுப்படுத்துவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கூறியதாவது, சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டது. அது தொடர்பாக ரியல் எஸ்டேட் துறை பிரமுகர்களிடம் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தப் புதிய வரி விகித மாற்றங்களால், பில்டருக்கு உள்ளீட்டு வரி திரும்பப்பெறல் கிடைக்கும் பலனானது குறைவாக உள்ளது என்ற பிரச்சினை உருவாகியுள்ளது2018-19 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.10 ஆயிரம் கோடி மீட்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார். போலி இன்வாய்ஸ், முறைகேடான ஜிஎஸ்டி கிரெடிட் போன்றவை ஜிஎஸ்டி வரி முறையில் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டுபிடிப்பதற்கும், தடுப்பதற்குமான பல்வேறு நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.

1.2 கோடி நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். வரி விகிதங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close