[X] Close

ஓலாவின் அடுத்த அதிரடி: குறைந்த வாடகையில் வருகிறது இ- ரிக்ஷா


ola-to-roll-out-10-000-electric-vehicles

  • நெல்லை ஜனா
  • Posted: 16 Apr, 2018 17:44 pm
  • அ+ அ-

இந்தியாவில் குறைந்த வாடகையில், அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இ-ரிக்ஷா எனப்படும் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய பன்னாட்டு கால் டாக்ஸி நிறுவனமான ‘ஓலா’ முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு பின் கால் டாக்ஸி தொழில் வேகமெடுத்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களில் குறைந்த செலவில் வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும் விதமாக கார்களை இயக்கி வருகின்றன. இதனால் ஏராளமானோர் கால் டாக்ஸியில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பன்னாட்டு கால் டாக்ஸி நிறுவனமான ‘ஓலா’ பல்வேறு சலுகைகளையும், குறைந்த வாடகை திட்டஙகளையும் அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், அதேசமயம் குறைந்த செலவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 10,000 எலெட்க்டரிக் ரிக்ஷாகளை அறிமுகம் செய்யவுள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை என பெரு நகரங்களில் மட்டுமின்றி, சிறுநகரங்களிலும் இ - ஆட்டோக்களை இயக்க திட்டமி்ட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோக்களை போன்று ஓரிரு வாடிக்கையாளர்கள் பயணம் செய்யலாம். இதன் மூலம் பயண செலவும் கணிசமாக குறையும்.

இதுகுறித்து ஓலா நிறுவனம் கூறுகையில் ‘‘இந்தியாவில் எங்கள் வணிகத்தை விரிவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இ- ரிக்ஷாக்களை இயக்க உள்ளோம். இந்தியாவின் பல நகரங்களில் 10,000 ரிக்ஷாக்கள் இயக்கப்படும். பரிசோதனை அடிப்படையில் சில நகரங்களில் ஏற்கெனவே இயக்கி வருகிறோம்’’ எனக்கூறியுள்ளது.  

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close