[X] Close

இந்தியாவில் பணிக்குச் செல்வோரில் வேலை-வாழ்க்கை சமநிலை 60% பேருக்கு சரியில்லை: மான்ஸ்டர் டாட்காம் ஆய்வில் தகவல்


job-pressure

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 11:22 am
  • அ+ அ-

இந்தியாவில் பணிக்குச் செல்வோரில் ஏறக்குறைய 60 சதவீதத்தினரின் வேலை மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலை என்பது மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மான்ஸ்டர் டாட்காம் என்ற வேலைவாய்ப்பு கன்சல்டிங் இணையதள நிறுவனம்கன்சல்டிங் இணையதள நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் 60 சதவீதம் பேர், தங்களின் வேலை மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலை மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மெட்ரோ அல்லாத நகரங்களில் பணிபுரிவோருக்குப் பெரும்பாலும் வேலை-வாழ்க்கை சமநிலை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், மெட்ரோ நகரங்களில் வாழ்பவர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலை பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

67 சதவீதம் பேர் வேலை இல்லாத சமயங்களிலும் கூட வேலையைப் பற்றியே சிந்திப்பதாகக் கூறியுள்ளனர். வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்படுவதால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். தூக்கமில்லை என 17 சதவீதத்தினரும், அழுத்தத்தில் இருப்பதாக 16 சதவீதத்தினரும், உயர் அழுத்தம் இருப்பதாக 5 சதவீதத்தினரும், எரிச்சலும் கோபமும் அதிகம் இருப்பதாக 9 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close