[X] Close

வங்கி வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்கும்


rbi-will-reduce-bank-interest-rates-further

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 10:47 am
  • அ+ அ-

பணவீக்கம் இதே நிலையில் கட்டுக்குள் இருந்தால் அடுத்த நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 75-100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம் என யுபிஎஸ் தரகு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் வரும் அக்டோபர் வரை இதே 4 சதவீதம் என்ற நிலையில் தொடர்ந்தால் 2019-20 நிதி ஆண்டில் சராசரி பணவீக்கம் 3.8 சதவீதமாக இருக்கும். அப்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

அடுத்த நிதி ஆண்டுக்குள் 75 முதல் 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close