[X] Close

அட்சய திரிதியை தங்கம் முதலீட்டிற்கு ஏற்ற காலமா?


akshaya-tritiya

  • நெல்லை ஜனா
  • Posted: 16 Apr, 2018 15:39 pm
  • அ+ அ-

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் பணம் கொழிக்கும், தங்கம் சேரும் என்பது பலரது நம்பிக்கை. இது மக்களின் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் முதலீடு என்ற அடிப்படையில் பார்ததால் அட்ச திரிதியையில் தங்கம் வாங்கினால் வளர்ச்சி அதிகமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாகவே தங்கத்தில் செய்த முதலீட்டிற்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் செய்த முதலீட்டிற்கு ஆண்டுக்கு 10.5 சதவீதம் வரை லாபம் கிடைத்தது. அதுவே 15 ஆண்டுகளுக்கு முன், லாப விகிதம் 8.89 சதவீதமாக குறைந்தது.

10 ஆண்டுகளுக்கு முந்தைய முதலீட்டிற்கு 5.82 சதவீதமாக குறைந்தது. 7 ஆண்டுகளுக்கு முன், 3.45 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு முன் 3.46 சதவீதமாகவும் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு குறைந்து போனது.

3 ஆண்டுகளுக்கு முன் 4.68 சதவீதம் என்ற அடிப்படையில் தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு லாபம் கிடைத்துள்ளது. பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் உள்ள முதலீடுகள் மட்டுமின்றி வங்கி வட்டி விகிதம் கூட இதை விட சற்று கூடுதலாகவே இருப்பதாக நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி அட்சய திரிதியை சீசனில் வழக்கத்தை விடவும் கூடுதலாக தங்கத்தின் விலை இருக்கிறது. சரி எதிர்காலத்தில் தங்கம் விலை உயருமா? என்ற கேள்விக்கும், கச்சா எண்ணெய் விலை நிலவரம் உட்பட சர்வதேச காரணிகளை பொறுத்தே அதன் விலை நிலவரம் இருக்கும். எனவே முதலீடு அடிப்படையில் பார்த்தால் அட்சய திரிதியை சீசன் என்பது சரியானதா என்பது கேள்விக்குரியே என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close