[X] Close

ஸ்டார்ட் அப் தொழில்களை அதிகரித்து இந்தியாவை ரூ. 10 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்றுவதே கனவு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி


start-up-business2

நரேந்திர மோடி

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 13:22 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி இந்தியாவை ரூ. 10 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்றுவதே தன் இலக்கு என்று கூறினார். அதற்கு இந்தியாவில் எண்ணிலடங்கா ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாக வேண்டும் என்றும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்றும் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த சர்வதேச தொழில் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்கள் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். அதன் மூலம் இந்தியாவை ரூ. 10 லட்சம் கோடி பொருளாதார நாடாக உருவாக்க முடியும் என்றும். அதுவே தன் இலக்கு என்றும் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது, நாட்டின் கொள்கைகள் முற்றிலும் முடங்கிப் போயிருந்தன. பணவீக்கமும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் உச்சத்தில் இருந்தன. அத்தகைய நிலையில் இருந்த இந்தியாவை, கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்களாலும், நடவடிக்கைகளும் இன்று வேகமாக வளரும் நாடாக மாற்றியிருக்கிறோம். மாற்றம் ஏற்பட்டிருப்பதை அனைவராலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பிறகு பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகபட்ச அளவில் 7.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம் பணவீக்கம் 4.5 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வழிவகை செய்துள்ளன” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close