[X] Close

இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்து விவரங்களைக் கேட்டு லண்டன் நீதிமன்றத்திடம் இந்திய வங்கிகள் மனு


mallya-s-property-in-england

விஜய் மல்லையா : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 13:15 pm
  • அ+ அ-

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய இந்திய வங்கிகள் இங்கிலாந்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து விவரங்களை நீதிமன்றம் மூலம் பெற முடிவு செய்துள்ளன.

விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 13 வங்கிகள் கடன் அளித்துள்ளன. மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி கடனுக்கு ஈடாக இங்கிலாந்தில் பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் சொத்து விவரங்களை அறிய வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மல்லையாவின் பெயரில் உள்ள சொத்துகளை வங்கிகள் பெயர் மாற்றம் செய்து மேல் நடவடிக்கை எடுக்க விரும்புகின்றன. இதனால் விஜய் மல்லையாவின் சொத்துகள் மற்றும் அவரது இரண்டு அதிக மதிப்புள்ள பாய்மரப் படகுகள் மற்றும் ரேஸ் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் அடங்குமா என விண்ணப்பத்தில் கேட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே 8-ம் தேதி பெங்களூரு டிஆர்டி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம் லண்டன் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன்படி விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மதிப்பு 114 கோடி பவுண்ட் (ரூ. 10,499 கோடி). இவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ளவையாகும்.

இவை தவிர விஜய் மல்லையாவுக்கு மேலும் பல சொத்துகள் உள்ளதாக வங்கிகள் கருதுகின்றன. ஆனால் கடந்த ஆண்டு நீதிமன்றம் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டபோதே தனது பெயரில் சொத்துகள் ஏதும் இல்லை என்றும் சில கார்கள் மற்றும் ஜூவல்லரி மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் மல்லையா தெரிவித்திருந்தார். ட்வென் எஸ்டேட் தனது குழந்தைகள் பெயரில் உள்ளதாகவும், லண்டன் டவுன் வீடு தனது தாயாருக்கு சொந்தமானது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பறிமுதல் நடவடிக்கையை நிறுத்துமாறு மல்லையா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு எதிராக இந்திய வங்கிகள் திவால் மசோதா நடைமுறையை பிறப்பித்துள்ளதாகவும் முதலில் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலில் மல்லையாவின் மனு விசாரிக்கப்படும் என்றும் அதையடுத்தே வங்கிகளின் மனு பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி கிறிஸ்டோபர் ஹான்காக் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் என தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close