[X] Close

ஸ்விக்கி ஸ்டோர் தொடங்க திட்டம்


swiggy

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 10:25 am
  • அ+ அ-

செயலி (ஆப்) மூலம் உணவுப் பொருள்களுக்கான ஆர்டர்களைப் பெற்று அதை விநியோகிக்கும் ஸ்விக்கி நிறுவனம் விற்பனையகங்களை தொடங்க முடிவு செய்துள்ளது. ஸ்விக்கி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் அன்றாட தேவைகளுக்கான பொருள்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

பழங்கள், காய்கறிகள், மளிகை பொருள்கள், மலர்செண்டுகள் (பொக்கே), குழந்தை பராமரிப்பு பொருள்கள், உடல் நலம் சார்ந்த தயாரிப்புகள், ஊட்டச் சத்து பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் செயலியானது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பொருள்களுக்கான ஆர்டர்களைப் பெற்று அவற்றை இந்த ஸ்டோர்கள் மூலம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீஹர்ஷா மஜெடி தெரிவித்துள்ளார். தரமான பொருள்களை வழங்க தங்கள் செயலி முன்னுரிமை அளிப்பதாகவும் அதை மக்கள் மிகவும் சவுகர்யமான வகையில் பெறுவதற்கு தங்கள் செயலி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்விக்கி ஸ்டோரானது பல்வேறு விற்பனை நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருள்கள் நிச்சயம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டு ஸ்விக்கி தொடங்கப்பட்டது இன்று இந்தியாவில் 60 ஆயிரம் உணவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து 80 நகரங்களில் மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close