[X] Close

எஸ்பிஐ-க்கு ரூ. 1 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை


sbi-to-rs-1-crore-fine

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 11:02 am
  • அ+ அ-

வங்கி விதிகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.1 கோடியை அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

1949-ம் ஆண்டைய வங்கி விதிமுறைகள் 47 ஏ பிரிவின் படி, வங்கிக் கடன் அளித்தவர் அந்தக் கடனை எதற்காகப் பெற்றாரோ அதை அந்தப் பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்விதம் கண்காணிக்கத் தவறினால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க இந்தச் சட்ட விதி அனுமதிக்கிறது. அந்த வகையில் இந்த அபராதத் தொகை தங்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close