[X] Close

நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7.6% இருக்கும்: மூடி’ஸ் கருத்து


moodys-guess-gdp-will-increase

  • Team
  • Posted: 01 Mar, 2018 05:24 am
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் நடப்பாண்டு (2018) ஜிடிபி 7.6 சதவீதமாக இருக்கும் என மூடி’ஸ் கணித்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் குறித்து மூடி’ஸ் கூறியிருப்பதாவது:

பணமதிப்பு நீக்கம் காரணமாக கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நடப்பு ஆண்டில் (2018) 7.6% வளர்ச்சியும் அடுத்த ஆண்டில் (2019) 7.5 % வளர்ச்சியையும் எட்டும்.

வங்கிகளில் மறு மூலதனம் மேற்கொள்ளும் நடவடிக்கை நீண்ட காலத்தில் பயன் அளிக்கும். இதனால் வங்கிகளின் கடன் வழங்கும் விகிதம் உயரும். இதனால் வளர்ச்சி சிறிதளவு உயரும். அதேபோல நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான வளர்ச்சியும் சிறிதளவு உயரும். அமெரிக்காவில் ஊக்க நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி உயரும். நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு 2.3 சதவீதமாக இருக்கும்.

2018-ம் ஆண்டில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, தென் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி விகிதம் உயரும். சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டிருப்பதால் நாடுகளின் வளர்ச்சி கணிப்பில் பெரிய மாறுதல் இருக்காது. என்றும் மூடி’ஸ் கூறியிருக்கிறது.

ஜி 20 நாடுகளின் 2018-ம் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 3.4% இருக்கும். அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதமாக இருக்கும். பணவீக்க அழுத்தம் காரணமாக முக்கியமான நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதே நிலைமை நீடிக்கும் என மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் தர மதிப்பீட்டை மூடி’ஸ் உயர்த்தியது நினைவு கூறத்தக்கது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் மதிப்பீட்டை மூடி’ஸ் உயர்த்தியிருந்தது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close