[X] Close

டாடா மோட்டார்ஸ் நஷ்டம் ரூ. 26,961 கோடி


tata-motors

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 11:10 am
  • அ+ அ-

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 26,961 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டது. இது நிறுவனத்தின் அதிக நஷ்டத்துக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ. 1,214 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சேதத் தொகை ரூ. 310 கோடி பவுண்ட் (ரூ. 27,838 கோடி) நஷ்டமாகும்.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 4.36 சதவீதம் அதிகரித்து ரூ. 77,582 கோடியாக உயர்ந்தது. தனிப்பட்ட முறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ. 617 கோடியாகும். இதேபோல நிறுவனத்தின் வருமானம் ரூ. 16,477 கோடியாகும். ஜாகுவார் நிறுவன வருமானம் 1 சதவீதம் சரிந்து 620 கோடி பவுண்ட்களாக இருந்ததாக குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close