[X] Close

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து


the-reserve-bank-may-cut-interest-rates

ராஜீவ் குமார் - PTI

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 11:06 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய் அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் போதும் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதுதான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். அதுவும், தற்போது தொழில்துறை சற்று சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. எனவே, தற்போது முதலீடுகள் அவசியமாக உள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கவேண்டிய நேரம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

பணவீக்கம் குறைவு

அவர் மேலும் கூறியதாவது, “ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு முயற்சிகளால் பணவீக்கம் குறைவாக இருக்கிறது. ஆனால், தற்போது தொழில் துறையில் மந்த நிலை உள்ளது. மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நலிவுற்ற தொழில் துறைகளை மீண்டும் புதுப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம். எனவே, இது மிகச் சரியான நேரம். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள்குறைக்கலாம். அதன் மூலம் முதலீடுகளை ஊக்குவித்து பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம். பல்வேறு தொழில்துறையின் எந்திரங்கள் இயங்க ஆரம்பிக்கும். முடிவு ரிசர்வ் வங்கியின் கையில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இன்று ஆர்பிஐ கூட்டம்

ராஜீவ் குமார் மட்டுமல்ல, தொழில்துறையினர் பெரும்பாலும் வட்டிவிகிதம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில்தான் உள்ளனர். இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து என்ன முடிவுகளை எடுக்கும் எனத் தெரியவரும். மேலும் ரிசர்வ் வங்கி கையிருப்பு குறித்து, நிபுணர் குழு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் என்ன முடிவெடுப்பார் என்பது இன்று தெரியவரும்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close