[X] Close

கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவன சிஇஓ மரணம்: பாஸ்வேர்டு தெரியாததால் ரூ. 1,360 கோடி பணம் முடக்கம்


ceo-passes-away

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 08:07 am
  • அ+ அ-

கனடாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் சிஇஓ குடல் வீக்க நோயினால் இந்தியாவில் இறந்துபோனார். அவர் நிர்வகித்து வந்த 190 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டாளர்களின் பணம், பரிவர்த்தனைக்கான பாஸ் வேர்டு தெரியாததால் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் முயன் றும் எவராலும் பாஸ்வேர்டை அறிய முடியவில்லை.

குவாட்ரிகா சி எக்ஸ் நிறுவனரான ஜெரால்டு காட்டனுக்கு வயது 30. இவருடைய நிறுவனம் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் உள்ள கிரிப்டோகரன்சி அதாவது டிஜிட்டல் கரன்சி முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. இவருடைய நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் 190 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூபாயில் ரூ. 1,360 கோடி.

குடல் வீக்க நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஆதரவற்றோர், மற்றும் அகதி சிறுவர்களுக்கான இல்லத்தை திறக்க வந்திருந்த போது உயிரிழந்து விட்டதாகக் கூறுகின்றனர். இதனை, அவருடைய நிறுவனமும், மனைவி ஜெனிஃபர் ராபர்ட்சனும் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், இவர் இறந்த செய்தியே, கடன் பாதுகாப்பு கருதி, நிறுவனத்தின் நிர்வாகமும், மனைவி ஜெனிஃபரும் நீதிமன்றத் துக்குச் சென்ற பிறகே வெளியே வந்துள்ளது. அதுவரை வெளிவர வில்லை. மேலும், அவருடைய பாஸ்வேர்டு தெரியாது என்பதால், நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முத லீடு செய்துள்ள பணத்தை எடுக்க முடியாததையும் குறிப்பிட்டுள் ளனர்.

”எங்களின் வாடிக்கையாள ருக்கு உதவ முடியாத நிலையில் உள்ளோம், இந்தப் பிரச்சினையை கையாள எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” எனவும் உச்ச நீதிமன்றத்தில் நிறுவனத்தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், அவருடைய மரணமே ஒரு மோசடி நாடகம் என் கின்றனர் பலர். அவர் இந்தியா சென்றதற்கான ஆதாரங்கள் இருக் கிறதா என்று கேள்வி எழுப்புகின் றனர். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங் களில் போய்க்கொண்டிருக் கின்றன.

ஒரு ட்விட்டர் பதிவில், அவர் இறப்பதற்கு இரண்டு வாரங் களுக்கு முன்பே, பரிவர்த்தனைக் கான வாலட்டுகளை எல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டார் என்றும், அவருடைய இரண்டு நாய்களுக்கு தன்னுடைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறையிலிருந்து ஒரு லட்சம் டாலர் விட்டுச் செல்வதாகக் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாஸ்வேர்டை மட்டும் எவ்வளவு முயன்றும் யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லையாம்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close