[X] Close

ஆட்டோமேஷன் விளைவால் 76% நிறுவனங்கள் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு


automation-process

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:36 am
  • அ+ அ-

தொழில்துறையில் ஆட்டோ மேஷன் தொழில்நுட்பத்தின் ஆதிக் கம் அதிகரித்திருப்பதன் விளைவாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என கூறப்பட்டுவந்த நிலையில், ஆட்டோமேஷனால், தொழில் நிறு வனங்கள் தங்களின் பணியாளர் கள் எண்ணிக்கையை அதிகரிக்க வும், தற்போதுள்ள பணியாளர் களைத் தக்கவைக்கவும் முயன்று வருவதாக ஆய்வில் தெரியவந்துள் ளது.

மேன்பவர் குழும நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் நிறுவனங்கள் பலவும் கணினிமயமாக்கலுக்கும், ஆட்டோமேஷனுக்கும் முன்னேறி வருவதால், உற்பத்தியும், புதிய வேலைவாய்ப்புகளும் அதி கரித்துவருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 76 சதவீத தொழில் நிறுவனங்களும், உலக அளவில் 87 சதவீத தொழில் நிறுவனங்களும் தங்களின் பணி யாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே தங்கள் தொழில் செயல்பாடுகளை ஆட்டோமேஷன் முறையில் மாற்றியுள்ள நிறுவனங் கள் முழுவதுமாக டிஜிட்டல் மயமாகியுள்ளன. இந்த நிறு வனங்கள் தங்களின் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகவும் தீர்க்கமாக இருப்பதாகக் கூறியுள்ளன.

மேன் பவர் குழுமம் 44 நாடுகளில் உள்ள 19,000 நிறுவனங்களிடம் செய்துள்ள கருத்துக்கணிப்பில், ஆட்டோமேஷன் தொழில் நுட்பத்தின் ஆதிக்கத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் என் னென்ன விளைவுகள் ஏற்படவிருக் கிறது என்று கேட்டுள்ளது. உலக அளவில் 87 சதவீத நிறுவனங்களும், இந்தியாவில் 76 சதவீத நிறுவ னங்களும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ள தாகவும், இதன் விளைவாக தங் களின் பணியாளர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளன.

“பணியிடங்களில் எந்த அள வுக்கு எந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அந்த அள வுக்கு தொழில் நிறுவனத் தலை வர்கள் கூறுவதுபடி, எந்திரங்க ளைக் கையாள்வதற்கு பணியாளர் களும் அதிகமாகத் தேவைப்படுகி றார்கள்” என்று கூறுகிறார் மேன்பவர் குழுமத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மன்மீத் சிங்.

திறன் பற்றாக்குறை

ஆனால், எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பணியாளர்கள் திறனுடன் இல்லை என ஆய் வறிக்கையில் கூறப்படுகிறது. உலக அளவில் திறன் பற்றாக்குறை 12 வருட உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து புதுப் புது திறன்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருப்ப தாகவும் கூறப்படுகிறது.

எனவே 84 சதவீத தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர் களின் திறனை மேம்படுத்துவதில் தீவிரமான முயற்சிகள் எடுத்து வருவதாகவும், 2020-க்குள் அதற்கு இலக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close