[X] Close

சந்தா கோச்சார் மீதான குற்றம் உறுதியானது: போனஸ், பங்குகளை திரும்பப் பெற ஐசிஐசிஐ வங்கி முடிவு


santha-kochar

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 06:49 am
  • அ+ அ-

சந்தா கோச்சார் விடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கியின் நடத்தை விதிமுறைகளை மீறியது உறுதி யானதால், அவருக்கு வழங்கப்பட்ட போனஸ் மற்றும் பங்குகளைத் திரும்பப் பெற ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளது.

சந்தா கோச்சார், விடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 300 கோடி கடன் வழங்கிய விவகாரத்தை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணா குழு, அவர் வங்கி நடத்தை விதிகளை மீறி கடன் வழங்கியதை உறுதி செய்தது. சந்தா கோச்சார் மீதான குற்றம் உறுதியானதால் ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு, அவரு டைய ராஜினாமாவை நிரந்தர பணி நீக்கமாக செயல்படுத்த முடிவு செய் துள்ளது. மேலும் அவருக்கு இதுவரை வழங்கிய போனஸ், மற் றும் உரிமை பங்குகளை திரும்பப் பெறவும் முடிவு செய்துள்ளது.

விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டதாக ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது அர விந்த் குப்தா என்பவர் 2017-ம் ஆண் டில் குற்றம்சாட்டினார். இது தொடர் பாக சிபிஐ தனது ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடங்கியது.

பின்னர், ஐசிஐசிஐ வங்கி இயக்கு நர் குழு, சந்தா கோச்சார் மீது நம் பிக்கை உள்ளதாகவும், இருந்தா லும் அவர் மீது நியாயமான விசா ரணை நடத்தப்படும் என்று கூறியது. அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி என் கிருஷ்ணா தலை மையில் குழு நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் மாதம் சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட் டார். கிருஷ்ணா விசாரணை குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பே கடந்த அக்டோபரில் சந்தா கோச்சார் தனது பதவியை ராஜி னாமா செய்தார். அவருக்குப் பதி லாக சந்தீப் பாக்‌ஷி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத், ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது கிருஷ்ணா விசாரணை குழுவின் அறிக்கையில், சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மைதான் என கூறி யுள்ளது. மேலும் வங்கியின் பொரு ளாதார நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு, சந்தா கோச்சாரின் ராஜினாமவை, நிரந்தரப் பணி நீக்க மாக முடிவு செய்துள்ளது. மேலும், 2009 முதல் இதுவரை அவருக்கு வழங்கிய போனஸ் மற்றும் பங்கு களைத் திரும்பப்பெறவும் முடிவு செய்துள்ளது. கடந்த பத்தாண்டு களில் ரூ. 10 கோடி வரை அவருக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 94 லட்சம் பங்கு கள் வழங்கப்பட்டுள்ளன. பங்கு களின் தற்போதைய மதிப்பு ரூ. 346 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவின் முடிவை அடுத்து ஐசிஐசிஐ வங்கிப் பங்கு கள் வியாழன் அன்று 3 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

சந்தா கோச்சார் இதுகுறித்து கூறு கையில், “விசாரணை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது. வங்கியின் எந்த வொரு முடிவும் தனிப்பட்ட ஒரு நபரால் செயல்படுத்தப்படுவ தில்லை. வங்கியின் நலனுக்காக எந்தவொரு கடுமையான முடிவை யும் நான் எடுக்க தவறியதில்லை. உண்மை ஒருநாள் புலப்படும்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close