[X] Close

நிதிப் பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்: எஸ்பிஐ அறிக்கை தகவல்


sbi-on-deficit

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:19 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டில் அரசு நிர்ணயித்துள்ளபடி நிதிப்பற்றாக்குறை இலக்கு எட்டப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டில் பற்றாக்குறை இலக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை அரசு நிச்சயம் எட்டும் என்றும் இதே போல வளர்ச்சி 11.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ. 672 லட்சம் கோடியாகவும் ஜிடிபி மதிப்பில் 3.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் நடப்பு ஆண்டின் இலக்கான 3.3 சதவீதம் நிச்சயம் எட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் அரசின் நிகர கடன் அளவு ரூ. 650 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் இதில் சந்தையில் திரட்டப்பட்ட தொகை ரூ. 413 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கடன் பத்திரம் மூலமாக ரூ. 30 ஆயிரம் கோடி முதல் ரூ. 35 ஆயிரம் கோடி வரை திரட்டப்படும் என்றும் இதனால் 2019-ம் நிதி ஆண்டில் பெறப்பட்ட கடன் அளவு ரூ. 605 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிறு சேமிப்பு மூலம் 2019-ம் நிதி ஆண்டில் திரட்ட உத்தேசித்திருந்த தொகை ரூ. 75 ஆயிரம் கோடியாகும். ஆனால் பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி திரட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. நவம்பர் வரையான காலத்தில் சிறு சேமிப்பு மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ. 45,396 கோடியாக உள்ளது.

தேசிய சிறுசேமிப்பு நிதியம் (என்எஸ்எஸ்எப்) அமைப்பானது வங்கிகள் அளிக்கும் வட்டி மற்றும் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை போக்குகிறது. பிபிஎப், சுகன்ய சம்ரிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியை விட கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

ஜனவரி வரையான காலத்தில் சேமிப்பு வளர்ச்சி விகிதம் 9.9 சதவீதமாக அதாவது ரூ.1,085 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் கடன் வழங்குதல் 14.5 சதவீத வளர்ச்சியை எட்டி ரூ. 1,185 லட்சம் கோடியாக உள்ளது. சேமிப்புக்கும், கடனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகளை வங்கிகள் எடுத்துள்ளன.

2020-ம் நிதி ஆண்டில் மாநிலங்கள் பெறும் கடன் அளவு ரூ. 550 லட்சம் கோடியாக இருக்கும். அதேபோல பெற்றுள்ள கடன் அளவு ரூ. 410 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணித்துள்ளது. -பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close