[X] Close

சில பொதுத்துறை வங்கிகள் இந்த ஆண்டு லாபம் ஈட்டும்: பியுஷ் கோயல் நம்பிக்கை


some-public-sector-banks-will-benefit-this-year

பியூஷ் கோயல்

  • kamadenu
  • Posted: 30 Jan, 2019 13:14 pm
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளில் சில இந்த ஆண்டு லாபம் ஈட்டும் என்று நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளும் 2017-18-ம் நிதி ஆண்டில் செயல்பாட்டு லாபம் ஈட் டியுள்ளதாக அவர் கூறினார். பொதுத்துறை வங்கித் தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் நிதிஆண்டில் சில பொதுத்துறைவங்கிகள் லாபம் ஈட்டும்.

நடப்பாண்டில் செயல்பாட்டு லாபம் ஈட்டியபோதிலும் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகம் என்றார். பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபம் ரூ. 36,757 கோடியாகும்.

அனைத்து பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மேம்பட அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று குறிப்பிட்ட கோயல், வங்கிகள் அனைத்தும் வலிமையானதாகவும், லாபம் ஈட்டக் கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவது மற்றும் வீட்டுக் கடன், வேளாண் கடன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட லஞ்ச தடுப்பு சட்டம் வங்கியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள தோடு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அளித்துள்ளதாக கோயல் குறிப்பிட்டார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2.6 லட்சம் கோடி அரசு முதலீடு செய்துள்ளது. அதேசமயம் ரூ. 2.8 லட்சம் கோடி கடன் திரும்பியுள்ளது. இதில் கடந்த மூன்று காலாண்டு களில் ரூ. 1 லட்சம் கோடி வாராக் கடன் தொகை வசூலாகியுள்ளது. இதையடுத்தே வங்கியாளர்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, இத்துறையை சீரமைக்க போடப்பட்ட 12 அம்ச கோரிக்கைக் கேற்ப கடனை விரைவாக வழங்குவது ஆகியன குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close