[X] Close

அரசு காப்பீடு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 4,000 கோடி நிதி கிடைக்க வாய்ப்பு


government-insurance-companies-will-get-rs-4-000-crore-funding

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 13:23 pm
  • அ+ அ-

2019-20-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அரசு காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசு காப்பீடு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து நிதி சேவைகள் துறை கோரிக்கை விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதிக அளவில் கிளெய்ம் செய்யப் படுவதாலும், பிற செலவினங்கள் அதிகரித்திருப்பதாலும் காப்பீடு நிறு வனங்களின் வருமானம் குறைந்து வருகிறது. இதனால் காப்பீடு நிறு வனங்களின் நிதிநிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய காப்பீடு நிறுவனம், ஓரியன்டல் காப்பீடு நிறுவனம் மற்றும் யுனைட்டெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ஆகிய மூன்று அரசு காப்பீடு நிறுவனங்களுக்கான மூலதன தேவைக்காக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய நிதித் துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிதி அரசு காப்பீடு நிறுவனங்களின் நிதிநிலையை வலுப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு முடிவான பிறகு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த மூன்று அரசு காப்பீடு நிறுவனங்களையும் இணைப் பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிதி ஆண்டுக்குள்ளாகவே இவை ஒரே நிறுவனமாக்கப் படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ஆனால், இதுவரையிலும் இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மார்ச் 31, 2017 நிலவரப்படி மூன்று காப்பீடு நிறுவனங்களும் 200 காப்பீடு திட்டங்களை விற்பனை செய்துவருகின்றன. இவை ஈட்டி உள்ள மொத்த பிரீமியம் தொகை ரூ.41,461 கோடி. இந்த மூன்று நிறுவனங்களும் காப்பீடு சந்தையில் 35 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close