[X] Close

திராட்சை பழச் சுவையில் புதிய குளிர்பானம்: கோக கோலாவின் ‘கலர்’


coca-cola

சென்னையில் கோக கோலாவின் புதிய குளிர்பானத்தை அறிமுகப்படுத்துகிறார் நிறுவனத்தின் தென் மேற்கு ஆசிய மற்றும் இந்தியப் பிரிவின் தலைவர் டி. கிருஷ்ணகுமார்.

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 12:36 pm
  • அ+ அ-

குளிர்பானங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் திராட்சை பழச்சுவையில் புதிய குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது. கலர் என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

ஏற்கெனவே இந்நிறுவனத்தின் பழச்சாறு பிராண்டான மினிட் மெய்ட் பிரிவில் இது இடம் பெற்றுள்ளது. இது இரண்டு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. 250 மி.லி அளவு கொண்ட சிறிய பாட்டிலின் விலை ரூ. 25 ஆகும். 600 மி.லி. பாட்டிலின் விலை ரூ. 40 ஆகும்.

இதை தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்த நடிகை கீர்த்தி சுரேஷை விளம்பர தூதராக நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவர் நடிக்கும் விளம்பரங்கள் விரைவில் வெளியாகும் என்று நிறுவனத்தின் தென் மேற்கு ஆசிய மற்றும் இந்தியப் பிரிவின் தலைவர் டி. கிருஷ்ணகுமார் தெரி வித்தார்.

உள்ளூர் சந்தையில் மிகவும் பிரபலமாக திகழும் காளிமார்க் நிறுவனத்தின் பொவன்டோவுக்கு போட்டியாக இது களமிறக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோக் நிறுவனம் அந்தந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பழங்களின் சுவையில் குளிர் பானங்களை அறிமுகப்படுத்து கிறது. அந்த வகையில் அடுத்து ஆந்திர மாநிலத்தில் புதிய குளிர் பானத்தை அறிமுகப்படுத்தப் போவதாக கிருஷ்ணகுமார் தெரி வித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close