[X] Close

நானோ உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு


tata-mottors

நானோ கார் : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 11:42 am
  • அ+ அ-

ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுத்த முடிவு செய்துள்ளது.

பாரத் 6 புகை விதிக்கேற்ப நானோ கார் வடிவமைப்பில் மாற் றம் செய்வதற்கு முதலீடு செய்வதற் குப் பதிலாக அந்தக் கார் உற்பத் தியை நிறுத்திவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து பாரத் 6 புகை விதி கட்டுப்பாடு அம லுக்கு வருகிறது. அதற்குப் பிறகு தயாராகும் கார்கள் இந்தபுகை விதிக்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது நானோ கார் குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

புதிய பாதுகாப்பு விதிகளுக் கேற்ப கார் வடிவமைப்பு இருக்க வேண்டும், அதாவது கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட பல கெடுபிடிகள் அமலுக்கு வர உள்ளன. இதற்கேற்ப நானோ காரில் மாற்றங்கள் செய்ய அதிக முதலீடு தேவை. ஆனால் அதன் விற்பனையோ குறைந்து வருகிறது. இதனால் 2020-ம் ஆண்டு ஏப்ரல் வரை மட்டும் இக் காரை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கார் தயாரிப்பு பிரிவின் தலைவர் மயங்க் பரீக் செய்தியாளரிடம் கூறினார்.

2009-ம் ஆண்டில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப் போது இது ரூ. 1 லட்சத்துக்கு விற்கப் படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மலிவு விலை கார்என்ற முத்திரையுடன் இது அறிமுகம் ஆனதால் இது எதிர்பார்த்த வெற்றி யைப் பெறவில்லை. இதன் விற் பனையும் குறைய ஆரம்பித்தது.

நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி, நானோ கார் உற்பத்தியை நிறுத்தலாம் என கூறியது, ரத்தன் டாடாவுக் கும் அவருக்கும் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் வெளி யேறிய காரணங்களில் ஒன்றாக கூறப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close